இலங்கை பிரதான செய்திகள்

யாழில் வர்த்தக நிலையம் வன்முறைக் கும்பலால் அடித்து சேதம்

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது என்று  காவல்துறையினர்  தெரிவித்தனர். “2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. முழுமையாக தலைக்கவசம் அணிந்திருந்த அவர்கள் கடைக்குள் புகுந்து பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடுகள் இல்லை. வர்த்தக நிலையத்திலிருந்து புறப்பட்ட கும்பல், அந்த வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் கண்ணாடி மற்றும் உதிரிப்பாகங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம்  காவல்துறையினர்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்று  காவல்துறையினர்மேலும் தெரிவித்தனர்.  #யாழ்ப்பாணம்  #வர்த்தகநிலையம்  #வன்முறைக்கும்பல்   #சேதம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.