இலங்கை பிரதான செய்திகள்

சிரேஷ்ட பிரதிக்காவல்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிக்காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பிரதி அதிபராக பிரதிக்காவல்துறை மா அதிபர் முன்னர் செயற்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காகவே ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது

லலித் பத்திநாயக்க இதற்கு முன்னரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்ததுடன், ஆணைக்குழுவில் இது வரையில் 72 பேர் சாட்சியமளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஜனாதிபதிஆணைக்குழு  #அழைப்பு  #லலித்பத்திநாயக்க #உயிர்த்தஞாயிறு

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.