இலங்கை பிரதான செய்திகள்

முல்லைதீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு :

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் நேற்றையதினம் கண்ணிவெடி ஒன்று கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ளும் இலங்கை கடற்படை அதற்கமைய நேற்றையதினம் முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்த போதே மேற்படி கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தக் கண்ணிவெடியானது விடுதலைப்புலிகள் தயாரித்த குண்டு என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #முல்லைதீவு #வட்டுவாகல் #கடற்கரை #கண்ணிவெடி #விடுதலைப்புலிகள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.