இலங்கை பிரதான செய்திகள்

கலமிட்டியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி 50 லட்சம் ரூபா நஷ்டஈடு

தங்காலை கலமிட்டியா பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியின் போது பாதிக்கப்பட்ட கரைவலை உரிமையாளர்கள் 21 பேருக்கு தலா 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த , நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , சானக மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கடற்றொழிலாளர்களுக்கு காலநிலை தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள வசதியாக இலவசமாக பாவிக்கக்கூடிய டயலொக் தொலைபேசி வசதியையும் டயலொக் நிறுவனத்தினர் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதேவேளை தங்காலை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கு முன்னர் மீன்பிடித் துறைமுகத்தினை பார்வையிட்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   குறித்த துறைமுகத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட கேட்டறிந்ததுடன் மேற்கொhள்ளப் கலமிட்டியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி 50 லட்சம் ரூபா நஷ;ட ஈடு வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

 

இதன்போது தங்கலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 150 இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதற்கு தற்போதை இறங்கு துறை போதாமல் இருப்பதால் மிதக்கும் இறங்கு துறை ஒன்றை அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்று துறைமுக அதிகாரிகளினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும்துறைமுகத்தின் ஒரு பகுதி காப்பெற் இடப்பட வேண்டிய அவசியம் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சரின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக சம்ந்தப்பிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போதுதங்கலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 150 இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதற்கு தற்போதை இறங்கு துறை போதாமல் இருப்பதால் மிதக்கும் இறங்கு துறை ஒன்றை அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்று துறைமுக அதிகாரிகளினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும்துறைமுகத்தின் ஒரு பகுதி காப்பெற் இடப்பட வேண்டிய அவசியம் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சரின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  #கலமிட்டியா #பாதிக்கப்பட்டவர்களுக்கு #நஷ்டஈடு #துறைமுகம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.