மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தாளம் பிட்டி கிராம மக்கள் இன்று வியாழக்கிழமை (5.03.20) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் இடம் பெயர்ந்து வந்த நிலையில் தற்போது 47 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக் கிராமத்தில் பல இளைஞர் யுவதிகள் உள்ள நிலையில் அவர்களுக்கு காணிகள் எவையும் இல்லை.
இந்த நிலையில் குறித்த கிராமத்தில் உள்ள அரச காணியினை தமது பிள்ளைகளின் எதிர் கால தேவைகளுக்கு பயண்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும் குறித்த அரச காணியை பொது தேவைக்கு அதிகாரிகள் பயண்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையிலே குறித்த காணியை பொதுத் தேவைக்கு பயண்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை கண்டித்து தாங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக கத்தாளம் பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Add Comment