உலகம் பிரதான செய்திகள்

சவூதிஅரேபிய அரச குடும்பத்தின் மூன்று மூத்த உறுப்பினர்கள் கைது


சவூதி அரேபிய அரச குடும்பத்தின் மூன்று மூத்த உறுப்பினர்கள் காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் சவூதி அரசரின் சகோதரரும் உள்ளடங்குவதாகவும் ஏனைய இருவர் சவூதி அரேபியாவில் மிகவும் செல்வாக்கு நிறைந்தவர்களாக விளங்குபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசரின் தம்பி இளவரசர் அகமது பின் அப்துல்அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த உறவினர் இளவரசர் நவாப் பின் நயீப் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கைது நடவடிக்கை உள்ளூர் நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த கைது நடவடிக்கைக்கும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போன்று, கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் சவூதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரியாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு முகமது பின் சல்மானால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட முகமது பின் நயீப் சௌதி அரேபியாவின் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

சவூதி அரேபியாவின் இளவரசராக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது முதல் அந்நாட்டின் அறிவிக்கப்படாத ஆட்சியாளர் போன்று முகமது பின் சல்மான் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது  #சவூதி  #அரசகுடும்பம்  #கைது  #முகமதுபின்சல்மான்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.