இந்தியாவில் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதன்படி கேரளாவில் அதிகபட்சமாக 17 பேர் உட்பட இந்தியா முழுவதும் 73 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உசேன் (76) கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #இந்தியா #கொரோனா #பலி
Spread the love
Add Comment