இந்தியா பிரதான செய்திகள்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் பலி எண்ணிக்கை இரண்டாகியது…

கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.. இவருடன் இந்தியாவில் இந்த வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவில் உயிரிழந்த முதலாவது நபர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய கர்நாடக மாநிலம் குல்பர்கி பகுதியை சேர்ந்தவர்.

76 வயது நிரம்பிய முகமது உசேன் என்ற இந்த நபர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த தினம் உயிரிழந்திருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உயிரிழந்த முகமது உசேனின் உடல் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் முகமது உசேன் கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என தெரிய வந்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு இன்று (14) உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.