இலங்கை பிரதான செய்திகள்

மார்ச் முதலாம் திகதிக்கும், 15 ஆம் திகதிக்கும் இடையில் இலங்கையில் தரையிறங்கியவர்களுக்கு….

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை சென்றவர்கள் தங்களதும் சமூகத்தினதும் நலனுக்காக அருகிலுள்ள காவல்  நிலையத்தில் அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு நேற்று (16) விஷேட அறிக்கை ஒன்று விடுத்திருந்தது.

இருப்பினும் குறித்த நபர்கள் காவல்  நிலையத்திற்கு  சென்று தங்களை பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை எனவும் காவல்  நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொண்டால் மாத்திலம் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில் செயல்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.