கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் முதல் பலி பதிவு செய்யப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்ல், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #கொரோனா #தமிழகத்தில் #பலி
Add Comment