சினிமா பிரதான செய்திகள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டொக்டர் சேதுராமன் மரணம்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டொக்டர் சேதுராமன் நேற்று நள்ளிரவு தனது 36 வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்த சேதுராமன் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி படித்துள்ளதுடன் தோல் சிகிச்சை நிபுணர் ஆவார். பல்வேறு மருத்துவம் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

தோல், முடி பிரச்சினைகளுக்கு ஏராளமான தீர்வுகளை யூடியூப் மூலம் வெளியிட்டுள்ளார். இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துவார். இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் தோல் நோய்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டுள்ளார்.

இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் 3 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். பின்னர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார்

கடந்த 2016-ஆம் ஆண்டு காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளர் உமையாள் என்பவரை  திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.   #சேதுராமன்  #மரணம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.