இலங்கை கட்டுரைகள் மலையகம்

கொரோனாவும் தலை ஏற்றிய சுமையும் தரை இறங்கவில்லை – புஸ்பலதா…

காலம் தோறும் உழைத்தும் தலையில் ஏற்றிய சுமைக்கும், அட்டைக்கடிக்கும், உழைப்புக்கும் ஓய்வு கிடைக்கவில்லை. இப்போது தொற்று நோய் உலகை முடக்கியும் கூட முகத்துக்கு கவசம் இன்றி மழையிலும், வெயிலிலும், பனியிலும் உழைகின்றனர் தோட்ட தொழிலாளர்கள். காலம் தோறும் உழைத்தும் கஷ்டக் காலத்தில் ‘அரைவயிற்றுக்கு கஞ்சி இல்லை அடுத்தமாத உணவுக்கு வயிறு காயத்தான் போகுது எந்த கப்பெனிகள் வந்து உணவு போட போகுது? என்ற கேள்வியுடன் எடுத்தார்கள் கையில் கொழுந்து கூடையை.’ காலனித்து ஆதிக்கத்தின் போது இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு மலைநாட்டு பகுதியில் குடியமர்த்தப்பட்டு தேயிலை, இறப்பர் பயிரிட்டு தோட்ட தொழில் புரியும் தோட்ட தொழிலாளியாக உருவாக்கினர். இலங்கை தனியானதொரு இடத்தை பொருளாதாரத்தில் பெற முதுகெலும்பாக தேயிலை, இறப்பர் காணப்படுகின்றது. அதற்கு பின்னால் தோட்ட தொழிலாளிர்களின் கடின உழைப்பு கண்டும் கண்டுகொள்ளாதது போல் இருக்கின்றது. இதன் மூலம் கிடைக்கும் வருமானமும்,  இலாபமும் சர்வதேச சந்தையில் இலங்கைக்கே அதிகம் கிடைகின்றது. எல்லா பருவ காலங்களிலும் இலங்கையில் தேயிலை உற்பத்தியாக்கப்படுகிறது. இலங்கையில் தேயிலை இறப்பர் உற்பத்தி வெளிநாட்டு வருவாயை பெற்று தரும் பிரதான வளமாகும். உலக அளவில் தேயிலைக்கான தேவையில் ஏற்றுமதிகளையும் இலங்கை மேற்கொள்ளுகின்றது. எனினும் இந்த உற்பத்திக்காக உழைத்து வரும் மக்களின் வாழ்வில்

என்ன சுகத்தினை கண்டார்கள்.
சாகும் வரை ஓய்வில்லை
சாவு கூட நிம்மதியில்லை
நாடெல்லாம் முடக்கம்
நாங்க வேலைக்குத்தான் போகனுமோ…?


பச்சை படர்ந்த தேயிலைகள் பயணிகள் ஏறியும் புறப்படாத லயன்கள் மாற்றம் இன்றி காட்சியளிக்கின்றது மலையக மக்களின் வாழ்விடமான லயன் வீடுகள். தொற்று நோய் வரும் தனித்து இருங்கள் எனவும் மனசாட்சி இல்லாதும் மரணிக்கப்படாத சட்டங்கள் அன்று தொடக்கம் இன்று வரை நடைமுறையில். அடுத்தடுத்த வீடுகளில் நெருக்குப்பட்ட வாழ்க்கை தொற்று நோய் வந்துடுமோ என்ற பயம் இப்பொழுது எம் மலை வாழ் மக்களுக்கு. தனி வீடு கேட்டதுக்கு அன்று தரமறுத்திங்களே…. இப்போ தனித்திருக்க சொன்ன நியாயம் என்ன…?

லயத்துகுள்ள ஒரு கூரை
வாழ்க்கை
அந்த ஒரு கூரை
லயத்துல எப்படி
தனித்திருக்க…….?

உணவருந்தாத உழைப்பு, சத்ததோடு நித்திரைரூபவ் நடுநடுங்கும் குளிருடன் கொழுந்து பரிக்கும் கைகள்ரூபவ் மரியாதை இல்லா பேச்சு, உழைப்புக்கான ஊதியம் இல்லை. கையில் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. சேர்த்து வைக்க சம்பளம் உயர்த்தி தரவும் இல்லை உழைத்து உழைத்து ஓடாகியும் ஓட்டை பாத்திரமாய் சட்டியில் ஒன்றும் இல்லை நாளைய நாள் உணவுக்கும். மரத்துப்போன விரல்களும் கொப்பளிக்க கொழுந்து பறிக்கிற கையும் தலையில் சுமையும் ஒரு நாள் உணவுக்காக என்பது உலகறிந்த விடயம். இன்று நாடெல்லாம் கொரானா தொற்று தடுப்புக்கு ஊரடங்கு சட்டம் தோட்ட தொழிலாளர்களோ முக கவசம் இல்லா உழைப்புடன் மலை தோட்டத்தில். நாடெல்லாம் கொரோனாவால் முடக்கம்…..

எம் தலை ஏற்றிய சுமை
தரை இறங்கவில்லை…..
எனக்கு என்ன
உனக்கு என்ன
வந்தா ஒரே நோய் தான்…..

காலம் தோறும் உழைத்தும் தலையில் ஏற்றிய சுமைக்கும்,  உழைப்புக்கும் ஓய்வு கிடைக்கவில்லை. அனர்த்தங்கள் மண்சரிவு என பல இயற்கை அனர்த்தங்களிலும் மண்மூடியும் மடிந்தனர் இப்பொழுது கொரோனா வைரசின் தாக்கம். தொற்று நோய் உலகை முடக்கியும் கூட உழைகின்றனர் பாராதூரமான பட்டினுக்கு பயந்து. நிவராண உணவும் இல்லை கம்பெனியும் சத்தம் இல்லை, செயல் இழக்கும் வரை இயந்திரம் வேலை செய்யும் என்பது போல தோட்ட தொழிலாளர்களை நினைத்து கொண்டார்கள். போசாக்கு உணவுல்லா பிரச்சினை போய் பாரதூரமான பட்டினியை எதிர்ரோக்க போகின்றார்கள் நம் மக்கள். இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு தருமா தோட்ட தொழில்கட்சி என எதிர்பார்திருக்க இன்று வரை ஒன்றும் கிடைக்கவில்லை.
நிவாரண உணவில்லை….


உழைப்புக்கு ஊதியம்
வேலைக்கு சென்றால் மட்டுமே…..

வேலைக்கு அரசு அனுமதி…
இலவசமாக முக கவசம்
தொழிற் கட்சி பேச்சுவார்த்தை……
எதிர்வரும் பாராதூரமான
பட்டினுக்கு
எங்கு சென்று முறையிடுவது?

அன்று பஞ்சக்காலத்தில் பிலாக்கா, மரவள்ளியும் வயிற்று பசி போக்கிய நிலைதான் மீண்டும் வருமோ? தோட்ட தொழிலாளர்கள் எதிர் நோக்கா பட்டினியை முகம்கொடுக்க நேருமோ? மாதந்தோறும் வாங்கிய பணத்தையெல்லாம் பதிக்கிய தொழில்கட்சி இப்பொழுதாவது உதவி செய்ய வருமா? தோட்ட தொழிலாளர்களின் உழைப்பில் ஏற்றுமதி இலாபம் கண்ட அரசு என்ன செய்ய போகின்றது? நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்க தோட்ட தொழிலாளர்களை அரசு வேலைக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது சரியா? உலகையே அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் தோட்;ட தொழிலாளருக்கு வராது என அரசாங்கம் எப்படி கூற முடியும்? தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கொழும்பிலும் ஏனைய வெளி மாவட்டங்களிலே அதிகம் தொழில் புரிந்து வருகின்றனர். எனவே அரசாங்கம் மற்றும் தோட்ட தொழில் சங்கங்கள் மலையகம் மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

ச.புஸ்பலதா
நுண்கலை சிறப்புக் கற்கை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.