உலகம் பிரதான செய்திகள்

கொரோனா – பிரித்தானியாவில் 3ஆவது NHS தாதியர் கொரோனாவுக்குப் பலி.


பிரித்தானியாவில் கொரோனாவின் தாக்குதலுக்கு NHSன் மற்றும் ஒரு மருத்துவ தாதியர் மரணித்துள்ளார். 23 வயதுடைய John Alagos 12 மணி நேர தொடர் பணிக்குப் பின் “முறையான பாதுகாப்பு அங்கி” இல்லாமல் மரணித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து மரணித்த மூன்றாவது NHS மருத்துவ பணியாளரான இவர் பிரித்தானியாவில் கொரோனாவின் பாதிப்புக்கு உட்பட்டு மரணித்த இளைய தாதியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Watford General Hospital லில் 12 மணி நேர பணியின் பின் தனது மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், எனினும் பணியாளர்களின் போதாமை காரணமாக அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது தாயார் ஜினா குஸ்டிலோ (Gina Gustilo) கவலை வெளியிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.