Home உலகம் கொரோனா – பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்….

கொரோனா – பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்….

by admin

பிரித்தானிய பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு ஒக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை சுகாதார செயலாளர் மாற் ஹான்கொக் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி (Health Secretary Matt Hancock and Chief Medical Officer Chris Whitty) இருவரும் கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்டுள்ளனர், எனினும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் சிலருக்கு கொரோனோ தொற்று அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானிய பிரதமர் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி…

Apr 6, 2020 at 20:51

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்  கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தகட்ட  அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தொடர்ந்து கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன்,  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் லண்டனில் உள்ள செயின்ட் தொமஸ் மருத்துவமனையில்  தொடர் சிகிச்சைக்கு உட்பட்டுள்ளார்.

இதேவேளை  “இன்று பிற்பகலில், பிரதமரின் நிலை மோசமடைந்துள்ளதனை அடுத்து,  அவரது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், அவர் மருத்துவமனையின்  தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். நாட்டின்  முதன்மைச் செயலாளராக இருக்கும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், தனக்கு பதிலான கடமைகளை  மேற்கொள்வார் என பிரதமர்  கேட்டுக்கொண்டார்”  என டவுனிங் ஸ்றீற் 10 இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக The Sun செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் “பிரதமர் சிறந்த கவனிப்பைப் பெறுகிறார்,  அனைத்து NHS  ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்குk; நன்றி.” என குறிப்பிட்டள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More