இலங்கை பிரதான செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழக வைத்தியகலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை லண்டனில் மரணமானார்…

இலங்கையைச் சேர்ந்த  70 வயதுடைய வைத்திய கலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை (Dr Anton Sebastianpillai) . கொரோனா வைரஸ் தொற்றினால் பிரித்தானியாவின் கிங்ஸ்றன் மருத்துவமனையில் காலமானார்.

வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரான இவர் கொரோனாவுக்கான நேர்மறை பரிசோதனையில் கொரோனா தொற்றுக்கு உட்பட்டமை  உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிங்ஸ்ரன் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு பின் மரணமானார்.

1967 ஆம் ஆண்டில் இலங்கையில் மருத்துவ ஆலோசகராக தகுதி பெற்ற மருத்துவரான இவர், தென்மேற்கு லண்டனில் உள்ள மருத்துவமனையுடன் நீண்டகால தொடர்பினைக் கொண்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஓய்வு பெற்றதாக கூறப்பட்ட போதிலும் கிங்ஸ்றன் மருத்துவமனை (Kingston Hospital) NHS அறக்கட்டளையில்  மார்ச் 20 வரை பணியாற்றியதாக  NHS உறுதிப்படுத்தி உள்ளது.

“கிங்ஸ்றன் மருத்துவமனையில் (Kingston Hospital) ஒரு பிரிவின் ஆலோசகராக இருந்த வயதான வைத்தியரின் மரணத்தை மிகுந்த சோகத்துடன் நான் உறுதிப்படுத்துகிறேன் ” என அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“மார்ச் 31 முதல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் கவனிக்கப்பட்ட வைத்தியர் அன்றன் செபாஸ்டியன்பில்லை சனிக்கிழமை மரணமானார். அவர் மிகவும் மதிக்கப்படுபவர். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனவும் கிங்ஸ்ரன் மருத்துவமைனையின் (Kingston Hospital) NHS அறக்கட்டளையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்திய கலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை (Dr Anton Sebastianpillai ) இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவத் துறையில் பயின்று 1967 இல் தகுதி பெற்றார். அப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை “வைத்திய கலாநிதி செபாஸ்டியன்பில்லையின் மரணம் மிகவும் சோகமான செய்தி, மிகவும் மரியாதைக்குரிய ஆலோசகரும் எழுத்தாளரான அவரைச் சந்திக்க பாக்கியம் கிடைத்தமை மகிழ்ச்சி” எனவும் லிபரல் டெமக்ராட் தலைவர் எட் டேவி குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.