உலகம் பிரதான செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பணிக்கு திரும்புகிறார்..


கனேடிய பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாக இன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டவுள்ளார். மார்ச் மாதம் 12ஆம்தேதி முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின் ட்ரூடோ 14 நாட்கள் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து  அவர் வீட்டிலிருந்தே பணிபுரியத்  தொடங்கினார். தொடர்ந்தும் அவர்  வீட்டிலிருந்தே பணிபுரிவார்  எனவும், ஏதாவது முக்கியமான அரசு கூட்டம் என்றால் தான் நேரில் கலந்து கொள்ளப்போவதாகவும்  தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கையாளுவதற்கான அடுத்த கட்டம் குறித்தும், பொருளாதார தாக்கங்கள் குறித்தும் கலந்தாலோசிக்க உள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.