இலங்கை பிரதான செய்திகள்

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்

பாறுக் ஷிஹான்

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன்  போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக வெள்ளிக்கிழமை(10) மாலை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தீவிரமாக பல நாடுகளில் பரவிக வருகின்ற இந்த  காலகட்டத்தில் எமது கிழக்கு மாகாணத்தில் இந்த வைரஸின் ஆதிக்கம் சற்று  காணப்படுகின்றது.

இதுவரைகாலமும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு நபர்கள் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதலாவது நபர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து தங்கியிருந்தவர் பரிசோதனையின் பின்னர் தோற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவருடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர் . அதன் பின்னர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட பொழுது தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எவருக்கும் புவனா தோற்று இல்லை என்றது உறுதிப்படுத்தப்பட்டது.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் இயங்கும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த நபர்   மார்ச்  மாசம் 15ஆம் தேதி கட்டார் நாட்டில் இருந்து திரும்பிய வேளை  அவருக்கு எந்தவித அறிகுறியுடன் தென்படாத நிலையில் அவருடன் பயணித்த ஒரு பயணிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எங்களுக்கு கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுரையின் பிரகாரம் குறித்த நபருடன் பிரயாணம் செய்த 7 பேரையும் கொரோனா  தொற்று  சம்பந்தமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் இதன்போது அக்கரைப்பற்றில் உள்ள நபருக்கு பொருள் ஏற்பட்டிருப்பது  உறுதிப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் சுகாதார அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய வெலிக்கந்தை  ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காகவும் கண்காணிப்புக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருடன் மிகவும்  நெருங்கிய தொடர்புடைய பத்துப் பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளன அவர்கள் தொடர்பான பரிசோதனைகள் இன்று இடம்பெற்று வருகின்றது இதன் பின்னரே அவர்கள் குறித்த விளக்கத்தை அளிக்க முடியும். இதுவரை எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபருடன் 10 பேர் மாத்திரம் நெருங்கிய தொடர்பைப் பேணி உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக பல பொய்யான வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது இதன் உண்மைத்தன்மை அறிய வேண்டுமெனில்  எமது கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அனுப்புமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

மத்திய அரசிலிருந்து எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மாவட்டம் தோறும் குறைந்தது 2 வைத்தியசாலைகள் ஏற்படுத்தஅனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகின்றோம்.இதனிடையே  மத்திய அரசு இருந்து வந்த கட்டளையின்  அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்தில் கொரோணா தொற்று உள்ளதாக சந்தேகிக்கும் நபர்களை  தடுத்து வைத்து பரிசோதனை  மையமாக மாற்றுவது குறித்து மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருடன் தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றோம். இந்தக் கொரோனா  தொற்றானது  பாரியளவில் பரவ தொடங்குமாயின் அனைத்து ஆதார வைத்தியசாலையும் பயன்படுத்துவதற்கான தயார்படுத்தலும் நடைபெற்று வருகின்றது.

அதேநேரம் அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு ஆளான நபருக்கு தற்போது தொற்று இல்லை என  பல கருத்துக்கள் பரவிவருகின்றது . பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.சுகாதார துறையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்றவகையில் மக்களுக்கு கூறுவது என்னவென்றால் புத்தாண்டு என்பது வருடாவருடம் வருவது இவ்வாறான தொற்றுநோய்கள் நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் கொள்ளை நோய் ஆகவே எங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இதுவரை எந்தவொரு நாடுமே ஒருநாள் தொடரில் பூரண அறிகுறிகளை கண்டுபிடிக்கவில்லை. தற்போது நாம்  கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டியுள்ளது.

புத்தாண்டு காலத்தில் உங்களையும் உங்களை உண்மையாக நேசிக்கும் நபர்களையும் பாதுகாக்க  வேண்டுமென்றால் சுகாதார திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளிஇ தனிநபர் இடைவெளி சுகாதாரம் இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உண்மையில் உங்களையும் உங்களைச் சூழ உள்ளவர்களையும் பாதுகாக்கவும் முடியும்.

தங்களை  தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை வழங்கும் அறிவுரைகளை  இயன்றளவு பின்பற்றி  மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து இந்த தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாப்பது  மக்களாகிய உங்களின் கைகளில் இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  #கொரோனா #கண்ணுக்கு  #எதிரி   


Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.