இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் கொரோனா – 911 பேர் பாதிப்பு – 9 பேர் மரணம் – இந்திய அளவில் 6761 பேர் பாதிப்பு – உயிரிழப்பு 206…

தமிழ்நாட்டில் மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது இன்று (10.04.20) உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இன்று தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதெவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 761ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 896 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மொத்தம் 206 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link