இலங்கை பிரதான செய்திகள்

சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

 

யாழ்.கோட்டை முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த பேதுருப்பிள்ளை அல்பிரட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் முனியப்பர் ஆலயத்தில் தொண்டாற்றிய வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

“முதியவரின் சடலம் மாலை கண்டறியப்பட்டது. அவரை அடையாளம் காண முடியவில்லை” என்று காவல்துறையினர்  யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் நேற்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதனை தொடர்ந்து முதியவரின் இறப்பு விசாரணையை முன்னெடுக்க திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு கட்டளை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்..

சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது #முனியப்பர்ஆலயம்   #அடையாளம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap