இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த எம்.அ.நசார் யாழில் மரணம் – கொரோனாவா?

கொரோனோ நோய் சந்தேகத்தில் கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு யாழ் கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாமினுள் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 62 வயதுடைய எம்.அ.நசார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரிய வந்தது. இதையடுத்து, கொரோனா சிகிச்சை விடுதியிலிருந்து சாதாரண விடுதிக்கு அவர் மாற்றப்பட்டார். அந்நிலையில், நேற்றிரவு திடீரென அவர் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினர் அனைவரும் கொடிகாமம் மற்றும் பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவரது உடல் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap