உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்கு பயிற்சி

மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என பிரித்தானிய தொண்டு நிறுவனமான மெடிக்கல் டிடெக்சன் டோக்ஸ் சரிட்டி (medical detection dogs charity)  நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலையில் அங்கு தினசரி பரிசோதனைக்குட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்னும் அளவிற்கே உள்ளது. இதனை ஒரு லட்சம் என அதிகரித்தால்தான் நாடு முழுவதிலும் கொரோனா தாக்கத்தற்குள’ளானவர்களை முழுமையாக கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும் என்னும் நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களை மோப்ப நாய்கள் மூலம் உடனடியாக கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்ட பிரித்தானிய தொண்டு நிறுவனமான மெடிக்கல் டிடெக்சன் டோக்ஸ் சரிட்டி நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது.

கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்க முடியும். 6 முதல் 8 வார பயிற்சி இதற்கு போதுமானது என குறித்த நிறுவனத்தில் தலைவர் கிளாரியா தெரிவித்துள்ளார்.

லப்ரடார் ரெட்ரீவர் இன நாய்களின் 3 வகைகளை இதற்கென பிரத்யேகமாக பயன்படுத்தலாம் எனவும் இந்த நாய்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களையும், இல்லாதவர்களையும் உடனடியாக தனது மோப்ப சக்தியால் அடையாளம் கண்டுவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு கொண்டு போய்விடலாம் எனவும் இந்த மோப்ப நாய்களை பரித்தானியாவில் உள்ள அத்தனை விமான நிலையங்களிலும் பயன்படுத்தி கொரோனா நோயாளிகளே நாட்டுக்குள் நுழைய முடியாதவாறு செய்துவிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லப்ரடார் இனத்தின் 3 ரக நாய்களுக்கும் பயிற்சி அளிக்க 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #பிரித்தானியா  #கொரோனா  #மோப்பநாய்  #பயிற்சி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.