வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் நடமாடிய பகுதிகளான அம்பாறை மாவட்டத்தின் 4 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் காவல்துறையினரால்; கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவௌ, மடவலலந்த , பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கே இவ்வாறு கட்டுப்பாடுக்ள விதிக்கப்பட்டுள்ளன. அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
அதேவேளை பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 12 கிராமங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பூமாடிய என்னும் கிராமத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மட்டக்களப்பிலுள்ள இரண்டு தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #அம்பாறை #பிரவேசிக்க #வெளியேற #தடை #வெலிசறை
Add Comment