கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது.
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்பினர்.இந்த நிலையில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
விடுப்பில் வீடு திரும்பிய நிலையில் உள்ள படையினரை மீளவும் கடமைக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தனிமைப்படுத்தல் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. #கோப்பாய்தேசியகல்வியற்கல்லூரி #முப்படை #தனிமைப்படுத்தல்நிலையம்
Spread the love
Add Comment