இலங்கை பிரதான செய்திகள்

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்போவதில்லை


பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்தபோவதில்லை என, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்தபோவதாக பரவிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விடுமுறையில் சென்றுள்ள படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக, சிறிய முகாம்களுக்கு அண்மித்துள்ள பாடசாலைகள் சிலவற்றை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அனுமதி கிடைத்துள்ளபோதிலும், அவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தபோவதில்லை எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.  #பாடசாலைகள்  #தனிமைப்படுத்தல்நிலையங்கள் #சவேந்திரசில்வா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap