சினிமா பிரதான செய்திகள்

பொலிவூட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்

 
புகழ்பெற்ற பொலிவூட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தனது 53 வயதில் இன்று ( காலமானார்.

லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த இர்ஃபான் கானின் உடல்நிலை மோசமானதால் நேற்று மும்பையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார் என்னும் செய்தி வெளியாகியுள்ளது.

தனது இயல்பான நடிப்பிற்காக மிகவும் பேசப்பட்ட இர்ஃபான் கான், பொலிவூட் படங்களான பிக்கு, லன்ச் பாக்ஸ், கரிப் கரிப் சிங்கிள், மக்பூல் உட்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் லைஃப் ஒஃப் பை, ஸ்லம்டாக் மில்லினியர், ஜுராசிக் வேல்ட் போன்ற ஆங்கில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு பான் சிங் தோமர் என்ற படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார்.

அதேவேளை கடந்த சனிக்கிழமை இர்ஃபானின் தாயார் சயீதா பேகம் ஜெய்பூரில் காலமாகியிருந்தார். தற்போது இந்தியாவில் ஊரடங்கு அமுலில் இருப்பதால், தாயின் இறுதிச் சடங்கில் இர்ஃபானால் கலந்துகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #பொலிவூட்  #இர்ஃபான்கான்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.