ஆப்கானிஸ்தானில் 7 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பட்டினி அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்தநிலை ஏற்பட்டுள்ளாக அறிக்கைகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் அங்கு பட்டினியை எதிர்நோக்குவதனால் நோய்கள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுமென சிறுவர்களுக்கான அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
7.3 மில்லியன் சிறுவர்கள் உட்பட ஆப்கானிஸ்தானின் சனத்தொகையில் மூன்றிலொரு வீதமானோர் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #ஆப்கானிஸ்தான் #சிறுவர்கள் #கொரோனா #பட்டினி
Spread the love
Add Comment