Home உலகம் COVID – 19 -ஐரோப்பாவில் உச்சம் தொட்ட UK – உலக அளவில் உச்சமடைந்த USA…

COVID – 19 -ஐரோப்பாவில் உச்சம் தொட்ட UK – உலக அளவில் உச்சமடைந்த USA…

by admin

 

கடந்த 24 மணி நேரத்தில், பிரித்தானியாவில் 739 பேர் மரணித்துள்ளதாக, NHS தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 27,510 ஆக அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பாவில் இரண்டாவது நாளாக,  கடந்த 24 மணித்தியால இறப்புகளில் பிரித்தானியா மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. ஸ்பெயின் +281 – இத்தாலி +269 – பிரான்ஸ் +218 என்ற அடிப்படையில் இறப்புகளைப் பதிவு செய்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவின் 1173 என்ற உச்சத்திற்கு அடுத்த நிலையில் பிரித்தானியாவின் மரணங்கள் பதிவாகி உள்ளன.

இதேவேளை புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +6,201 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 177,454 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில்,  இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணமான 352 பேரில்,

20 – 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் –  3.

40 -50 வயதக்கு இடைப்பட்டவர்கள் –  25.

60 -79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் –  126.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் –  198.

என்ற எண்ணிக்கை அடிப்படையில் மரணமாகி உள்ளதாக  தேசிய சுகாதாரசேவைப் பதிவில்  குறிப்பிட்டுள்ளது.

Age group          Total

0-19 00
20-39 3
40-59 25
60-79 126
80+ 198
TBC 0

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More