இலங்கை பிரதான செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்ற விவசாயிகளுக்கு  அழைப்பு:

நாட்டில் கொரோனா வைரஸ் நோய் காரணமாகவும் தொடர் ஊடரங்கு நிலைமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு அரசாங்கம் பல்வேறு வகையான விசேட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் எம் விவசாய பெருமக்களுக்காக அரசினால் பல்வேறு உதவி திட்டங்களான சௌபாக்யா வீட்டுத்தோட்டம், சிறு போகத்திற்கு விதைகளை மானியமாக வழங்கல், 16 பயிர் உற்பத்திக்கு உத்தரவாத விலை, விசேட விவசாய வங்கி கடன் வசதி போன்ற விவசாய செய்கையை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டங்கள் மூலம் சகல விவசாயிகளும் இப் பயன்களை பெற்றுகொள்ளுமாறு முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் விசேட அழைப்பை விடுத்துள்ளார்.

அந்த வகையில் அரசாங்கத்தினால்

 * சௌபாக்யா வீட்டுத்தோட்டம்

* சௌபாக்யா தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டம்.

* சிறு போகத்திற்கான 16 பயிர்களுக்கு விதை மானியம்.

* விவசாய பயிர் காப்புறுதி திட்டம்

*விவசாயிகளுக்கு உத்தரவாத விலைகளை அரசு அறிவித்துள்ளது.

* கிராமிய கொடுகடன் திட்டம் நாடு முழுவதையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறன பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் உரிய காலங்களுக்குள் பதிவுகளை மேற்கொண்டு விவசாய துரித அபிவிருத்தி பயணத்தில் கைகோர்க்க விவசாயிகள் முன்வர வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்ததுள்ளார்.

நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முற்றாக இறக்குமதியை தடைசெய்து சிறு போகத்தில் 16 முக்கிய பயிர்களுக்கு உத்தரவாத விலைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், பச்சை உழுந்து, வேர்க்கடலை, மிளகாய், சோயா, குரக்கன், எள்ளு, கொள்ளு, மஞ்சல், இஞ்சி, பூண்டு, கௌப்பி, பயறு போன்ற 16 முக்கிய பயிர்களுக்கு இந்த உத்தவரவாத விலைகளை அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில்

*சோளம் – 50.00

*உருளைக்கிழங்கு – 100.00

*பெரிய வெங்காயம் – 100.00

*சின்ன வெங்காயம் – 110.00

*பச்சை உழுந்து – 200.00

*வேர்க்கடலை – 220.00

*மிளகாய் – 650.00

*சோயா – 125.00

*குரக்கன் – 175.00

*எள்ளு – 200.00

*கொள்ளு – 250.00

*மஞ்சள் – 80.00

*இஞ்சி – 125.00

*பூண்டு – 350.00

*கௌப்பி -220.00

*பயறு – 220.00   இவ்வாறு உத்தரவாத விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அடுத்தபடியாக  சிறு போகத்திற்கான 16 பயிர்களிற்கு விதை மானியம் வழங்கப்படுகிறது.

1/2 ஏக்கர் வரை விதைகள் இலவசம் / செலவு மீள வழங்கப்படும். 1/2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை 50% விதைகளுக்கான  நிதியுதவி வழங்கபடும்.

சோளம், கௌபீ, பாசிப்பயறு, சோயா, உழுந்து, கொள்ளு, எள்ளு, நிலக்கடலை, குரக்கன், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, மஞ்சள், இஞ்சி, வெள்ளைப்பூடு ஆகிய 16 பயிர்களிற்கே இம் மானியம் வழங்கப்படவுள்ளது.

சிறுபோகத்தில் பயிரிடுவதற்கு தேவையான விதைகளுக்கான மானியத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் மே மாதம் 20 ஆம் திகதிக்கு முன் உங்கள் பிரதேச விவசாயப் போதனாசிரியரை/ கமநல சேவை நிலைய உத்தியோகத்தரை சந்தித்து விதை மானியத்தை பெற்றுகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக நிதியளிக்கப்பட்ட வட்டி மானியம் மற்றும் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம் (NCRCS) (உத்தரவாதமளிப்புத் திட்டம்) இலங்கை அரசாங்கத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நஷனல் பாங்க் பிஎல்சி, கொமர்சியல் பாங்க் பிஎல்சி, யூனியன் பாங்க் பிஎல்சி, செலான் வங்கி பிஎல்சி, சம்பத் பாங்க் பிஎல்சி, சணச டிவெலெப்மன்ட் பாங்க் லிமிடெட், நஷனல் டிவெலெப்மன்ட் பாங்க் பிஎல்சி, டிஎவ்சிசி பாங்க் பிஎல்சி, எச்டிஎவ்சி பாங்க் பிஎல்சி, காகிள்ஸ் பாங்க் லிமிடெட் ஆகிய நிதியியல் நிறுவனங்கள் தகுதியுடைய பண்ணையாளர்கள் (பயிர்ச்செய்கைக்கான நிலம் கொண்டவர்கள்) பயன்பெறுநர்களாக இருக்க முடியும் எனவும் தகுதியுடைய துணை கொடுகடன்களினை தகுதியுடைய  பயன்பெறுநர்களுக்கு வழங்குவதுடன் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நேர அட்டவணைப்படி இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வட்டி மானியத்தினை பெற்றுக்கொள்ளும் திட்டமாக இது விளங்குகிறது.

இக் கடன் தொகையின் வட்டி வீதம் ஆண்டிற்கு 4 சதவீதம் (4% ) என வரையறுக்கப்பட்டுள்ளது. மற்றும் மீளச்செலுத்தும் காலமாக வீட்டுத் தோட்டம் உள்ளடங்கலாக 33 பயிர்களுக்கு 270 நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கரும்பிற்கு மட்டும் 365 நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தகுதியுடைய 33 பயிர்களாக நெல், மிளகாய், வெங்காயம், கௌபி, பயறு, உளுந்து, சோயா அவரை, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக் கிழங்கு, வற்றாளைக் கிழங்கு, மரவள்ளி, பால் கிழங்கு, வெண்டைக்காய், பீட்றூட், போஞ்சி, கோவா, கரட், கறிமிளகாய், தக்காளி, லீக்ஸ், முள்ளங்கி, நோக்கோல், பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், இஞ்சி மற்றும் கரும்பு ஆகியனவும் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகளின் பயிர்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ஆகக் கூடிய கடன் தொகை 33 பயிர்களுக்கு 500,000ரூபாயும் வீட்டுத் தோட்டப்பயிர்களுக்கு 40,000 ரூபாயும் நாற்றுப்பண்ணைளுக்கு 500,000 ரூபாயும் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயிருக்கு பயிர் ஆகக்கூடிய கடன்தொகை மாறுபடும்.

இவ்வாறன பயன் தரும் திட்டங்கள் மூலம் அபிவிருத்தி அடைந்து வரும் எம் நாட்டின் வளர்ச்சி பாதையில் முக்கிய பங்காளி என்ற வகையில் சேர்ந்து பயணிபோம் எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.