இந்தியா பிரதான செய்திகள்

கொரோனா – சீனாவை மிஞ்சிய இந்தியா 11 ஆவது இடத்தில்…

Getty Images

இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,940-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியுள்ளது இந்தியா.

கடந்த 24 மணி நேரத்தில்  3,970 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 103 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,752ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இந்தியா தற்போது 11ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, இரான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இருக்கின்றன.சீனா 13வது இடத்தில் உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.