இலங்கை பிரதான செய்திகள்

மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழப்பு

கொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் வேளையில் தனியார் ஒருவரால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். #மாளிகாவத்தை #நெரிசல்    #பெண்கள் #உயிரிழப்பு #நிவாரணம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.