அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி எதிர்வரும் 26 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனத்தை முறையற்ற விதத்தில் கையகப்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டம் குறித்து நிசங்க சேனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்
அதேவேளை அமைச்சுக்களின் முன்னாள் செயலாளராக கடமையாற்றிய விக்டர் சமரவீர மற்றும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் முன்னாள் பதில் செயலாளர் சமன் திசாநாயக்க ஆகியோர் செய்த முறைப்பாடுகள் தொடர்பிலும் 26 ஆம் திகதி விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது #நிசங்கசேனாதிபதி #ஆணைக்குழு #அவன்கார்ட்
Spread the love
Add Comment