Home கட்டுரைகள் மாற்றங்களுக்கான, உரையாடல்களுக்கான முன்னோட்டம். – சி.ஜெயசங்கர்…

மாற்றங்களுக்கான, உரையாடல்களுக்கான முன்னோட்டம். – சி.ஜெயசங்கர்…

by admin

கல்விஎன்றால் என்ன? கல்விஏன்?,எதற்காக? என்பது அடிப்படையானது. கல்வியை எப்படி ஊட்டுவது அல்லது கற்பிப்பது என்பதெல்லாம் மேற்கூறியவற்றைத் தொடர்ந்துவருவது. ஆனால், கொறொனா பின்புலத்தில், எம்மத்தியிலான, கல்விஅம்மணப்பட்டுப் போயிருக்கிறது. ஆயினும்,அம்மணப்பட்டுப் போயிருப்பது தெரியாமல், தொடர்ந்தும் இருப்பதுதான் கொறொனாவிலும் பெரும் பேரனர்த்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், எப்படிகற்பிப்பது என்பதுதான், பூதாகாரப் பிரச்சனையாக இருக்கிறது.

கொறொனா கொண்டு வந்திருக்கும் உலக நிலவரம், அதன் உடன் நிகழ்கால, எதிர்கால நிலவரங்களுக்கு முதுகைக்காட்டிக் கொண்டு, ஏற்கனவே எழுதப்பட்ட பாடத்திட்டங்களை, படிப்பிப்பதே கல்விநடவடிக்கையென, முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இந்தத் தீக்கோழிமனோபாவ உருவாக்கமே ,கல்விஎன்றாகி இருக்கிறது.

மாணவர்கள் தங்களை,தங்களது சூழலை, உலகநடப்புகளை, நிலவரங்களை அறிந்துவிடக்கூடாது, என்றவகையில், கூட்டுக்குள் இருந்து வெளியேவந்த கோழிக் குஞ்சுகளை, உடனே யே மடக்கிப் பிடித்துக் கூட்டுக்குள் அடைத்துவிடும் நடவடிக்கையாகவே, கொறொனாகாலக் கல்விநடவடிக்கைகள் காணப்படுகின்றன.

2020, 2021 எப்படி இருக்கும் என்பதைகற்பனைசெய்துகொள்ளவும் முடியாதவொருகாலத்தில்,எங்களதுகல்விஉலகம்,யதார்த்தத்துடன் இல்லையென்பது, வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றபோதும், பழையசுற்றில் ஓடிவிட முனைவது எதனைக் காட்டுகிறது? கல்வியின் அர்த்தத்தையும், நோக்கத்தையும் இழந்து விட்டிருக்கிறோம் என்பதைதானே!

கொறொனா அனர்த்தகாலம் மற்றுமொரு விடுமுறைகாலம் அல்ல. உலகம் இப்பொழுது முன்னிருந்தது போலில்லை. இனியும் முன்னிருந்தநிலை மீளவந்து விடவும் போவதில்லை. புதியநிலைமைகளை நோக்கி,கொறொனா எல்லோரையும், உலகையும் நகரவைத்திருக்கிறது.

இது பற்றி இரண்டு விதமான கருதுகோள்கள் நிலவிவருகின்றன. ஒன்று : முதலாளியம் அம்பலபட்டுவிட்டது, கூட்டுறவு, ஆட்சிக்கானகாலம் வாய்த்திருக்கிறது. இரண்டு : கோப்பறேட்டுகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் அல்லதுகிடுக்கிப் பிடிக்குள் உலகம் போய்விட்டிருக்கிறது என்பது. கோப்பறேட்டுகளின் முற்று முழுதான பார்வைக்குள்ளும், கட்டுக்குள்ளும் வீட்டுக்குள் அடைப்பட்ட மனிதர், இணையவழி அகப்பட்டனர் என்பது மேற்கூறியவற்றுடன் தொடர்புபட்டது.

மற்றையது பொருளாதார வளர்ச்சிப் பற்றிய இதுவரைகால வரைவிலக்கணம் நிராகரிக்கப்பட்டு, மக்களின் மகிழ்ச்சியும், நிறைவான வாழ்க்கையும் முதன்மைக்குரியதாகக் கொள்ளப்பட வேண்டுமென்பது. இவ்வாறானபற்பல விடயங்கள் எழுமாறாக நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிலவரங்களைப் புரிந்துக் கொண்டுவாழும் தலைமுறைகளைபற்றி சிந்திக்கப் போகின்றோமா? வேலையற்றப் பட்டதாரி பெருக்கத்துக்கான கல்வியைத் தொடரப் போகின்றோமா? என்பதே எம் முன்னுள்ளகேள்வி.

ஏலவே, தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பையும், சம்பளக்குறைப்பையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. உலகவங்கியினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் உறுக்கலான உத்தரவுகள் வருவதற்கு நீண்டகாலம் எடுக்கப் போவதில்லை. இந்நிலையில் உலகவல்லரசுகளின், ஆதிக்கங்கள், ஆக்கிரமிப்புகளை எதிர்க்கொள்ளக்கூடிய நாடுகளது கூட்டமைப்புகள் சாத்தியப்படுமா?

இவற்றுக்கு சமாந்தரமாக ,கொறானாஎனப்படும் கொவிட்19 தொற்றுப் பரவுவதால், ஏழைகளதும், முதியவர்களதும் மரணம் கோப்பறேட்டுகளின் இலாப அதிகரிப்பை, வலுவாக்குவது தொடரப்போகிறதா? மனிதர்கள் உள்ளூர் அறிவுதிறன்களுடன், ஆதிக்கநீக்கம் பெற்ற, புதிய உலகங்களின் எழுச்சிக்காக வாழப்போகிறார்களா? இவை இன்றையகாலத்தைப் புரிந்துக் கொள்ளவும்,முன்னெடுப்புகளுக்கு தயார்வதற்குமான சிலபகிர்வுகள். இந்த இடத்தில்,எமது கல்வி எதுவாக இருக்கப் போகின்றது. குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களான, பல்கலைகழகங்களின் பங்கும் பணியும் எதுவாக இருக்கப் போகின்றது?
சி.ஜெயசங்கர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More