இலங்கை பிரதான செய்திகள்

சங்கரத்தையில் வீடு கையளிப்பு

அரசின் வீட்டுத் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரினால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. மீள்குடியேற்றம், பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், சுமார் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபா நிதியில் இந்த வீடு அமைக்கப்பட்டது. இதில் இராணுவத்தினரின் பங்களிப்பும் வழங்கப்பட்டது.

சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/159 சங்கரத்தை – துணைவி கிராம அலிவலர் பிரிவில் அமைக்கப்பட்ட இந்த வீட்டை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய கையளித்தனர்.

இந்த நிகழ்வில், மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், உதவி அரச அதிபர் (காணி) சட்டத்தரணி எஸ்.முரளிதரன், இராணுவ உயர் அதிகாரிகள், சங்கானை பிரதேச செயலாளர், வட்டுக்கோட்டை காவல்துறைபொறுப்பதிகாரி, கிராம அலுவலர் எனப் பலர் கலந்து கொண்டனர்.  #சங்கரத்தை #வீடு  #கையளிப்பு

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap