மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக, சட்டமா அதிபர் வரைந்த ஆவணங்களில் தாம் 21 ஆயிரம் தடவைகள் கைச்சாத்திட்டதாகவும், இதற்கு மூன்று நாட்கள் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மகேந்திரனை நியமித்த போது, தாம் அதனை கடுமையாக ஆட்சேபித்ததாகவும் ஆட்சி அமைத்து, இரு வாரங்களுக்குள்ளேயே முன்னாள் பிரதமருடன் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக அர்ஜூன் மகேந்திரனின் நியமனத்தை ஏற்கும் நிர்ப்பந்தம் உருவானதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். #அர்ஜூன்மகேந்திரன் #இலங்கை #மத்தியவங்கி #கையொப்பங்கள்
Add Comment