ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்திய ஒருவர் காவல்துறையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலக்கம் 531, சுந்தராபொல வீதி, யத்தன்பலாவ, குருணாகலை முகவரியில் வதியும் ஈ.எம்.பீ.ஏ குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பணித் தடைக்கு உள்ளாகியுள்ள அவர் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பதவியுயர்வுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்துமாறு குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடிதத் தலைப்பையும், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் எழுதப்பட்டுள்ள கடிதமொன்றையும் இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குமார என்பவரை வங்கி தலைமையகத்திற்கு அழைத்ததன் பின்னர் நேற்று (03) கைது செய்யப்பட்டார். ஆவணத்தை தயார் செய்வதற்கு பயன்படுத்திய மடிக் கணினி மற்றும் ஏனைய உபகரணங்களும் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 08 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. #ஜனாதிபதி #கையொப்பம் #கோத்தாபய #மோசடி #கைது #பணித்தடை
Add Comment