இலங்கை பிரதான செய்திகள்

PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ள அமெரிக்க தூதரக அதிகாரி


கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ள குறித்த அதிகாரி இராஜதந்திர சிறப்புரிமையின்; கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது வெளியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு தமது இராஜதந்திர பணியாளர்கள் செல்லும்; போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. #PCR  #அமெரிக்கதூதரகஅதிகாரி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.