இலங்கை பிரதான செய்திகள்

கல்முனையில் பாரிய தீவிபத்து – பல்பொருள் அங்காடி எரிந்து நாசம்

கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இத் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை(7) மாலை 3.30  மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கல்முனை  காவல்துறையினர் ,மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர்  பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன்  சுமார் 1 மணி நேரத்தின் பின் தீவிர முயற்சி காரணமாக தீ மேலும் பரவாமல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து    மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா அல்லது நாசகார செயற்பாட்டுடன் தொடர்புடையதா என காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். #கல்முனை #தீவிபத்து #பல்பொருள்அங்காடி

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.