Home இந்தியா இந்தியாவில் இன்றுமுதல் வழிபாட்டுத்தலங்கள், ஷொப்பிங் மால்கள், உணவகங்கள் ,அலுவலகங்கள்   திறக்கப்படுகின்றன.

இந்தியாவில் இன்றுமுதல் வழிபாட்டுத்தலங்கள், ஷொப்பிங் மால்கள், உணவகங்கள் ,அலுவலகங்கள்   திறக்கப்படுகின்றன.

by admin

கொரோனா காரணமாக இந்தியாவில் அமுலிலிருந்த பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள், ஷொப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

எனினும்; கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குளிரூட்டி சாதனங்களை இயக்கினால் அதன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இன்று திறக்கப்படும் அலுவலகம் மற்றும் கடைகளுக்கு வெளியே கட்டாயம் சானிடைசர்கள் வைக்க வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வழிபாட்டுத் தலங்களில், பிரசாதம் வழங்கக்கூடாது, புனித நீர் தெளிக்கக்கூடாது, சிலை மற்றும் வழிபாட்டு நூல்களைத் தொடக்கூடாது, ஒரே நேரத்தில் அதிகளவிலான மக்கள் கூடக்கூடாது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பக்தர்கள் காலணிகளை தங்களது வாகனங்களுக்குள்ளே வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க, வழிபாட்டுத்தலங்களில் பாடல் பாடும் குழுக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் 50வீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதுடன் உணவகங்களின் அமர்ந்து சாப்பிடாமல், உணவுகளை வாங்கிச்செல்ல மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். வீடுகளுக்கு உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மற்றும் சமையல்காரர்களுக்கு தெர்மல் சோதனை செய்யப்படும்.

அலுவலகத்தைப் பொருத்தவரை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதி இல்லை. அங்குள்ள உணவகங்களில் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், லிப்ட்களில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், ஒருவருக்கு கொரோனா அறிகுறி தோன்றினால் உடனே அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இந்தியா #வழிபாட்டுத்தலங்கள் #ஷொப்பிங்மால்கள் #உணவகங்கள்  #அலுவலகங்கள்    #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More