ஈரான் குவாட் ராணுவ படையின் தலைவர் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தில் அமெரிக்காவின் மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலரும் ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதயைடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்த ஈரான் அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஜனவரி 8 ம்திகதி ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனாலும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இந்நிலையில் குவாசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ஈரான் காவல்துறை கைது செய்தது.
விசாரணையில் சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மக்மூத் மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். #சுலைமானி #கொலை #அமெரிக்கா #மொசாட் #மரணதண்டனை #ஈரான்
Add Comment