உலகம் பிரதான செய்திகள்

பொதுமக்களை ஏமாற்றிய உணவக உரிமையாளர்களுக்கு 1446 ஆண்டுகள் சிறை


சாப்பாட்டு விடயத்தில் பொதுமக்களை ஏமாற்றிய உணவகம் ஒன்றின் உரிமையாளர்கள் இருவருக்கு பாங்கொக் நீதிமன்றம் 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள லீம்கெட் இன்ஃபைனைட் எனும் கடல் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம், தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக முன்கூட்டியே இணையம் மூலம் பணம் செலுத்தும் திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு அறிவித்தது.

அந்த உணவகத்தின் கடல் உணவுகளை குறைந்த விலையில் பெறுவதற்காக சுமார் 20 ஆயிரம் பேர், 50 மில்லியன் தாய் பட் மதிப்பிலான வவுச்சர்களை இணையம் மூலம் வாங்கியுள்ளனர் என தாய்லாந்து செய்தி நிறுவனமான பிபிஎஸ் தெரிவித்துள்ளது

ஆனால் தங்களுக்கான தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அதைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும் கூறி அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் அபிசார்ட் பவோன்பன்சாரக் மற்றும் ப்ரபாசன் பவோன்பன்சா ஆகியோர் அந்த உணவகத்தை மூடிவிட்டனர்.

பணம் செலுத்தி ஏமாந்த நூற்றுக்கணக்கானவர்கள் வழங்கிய முறைப்பாடுகளை அடுத்து உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு இவ்வாறு நீதிமன்றம் 1446 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்தில், அதிக எண்ணிக்கையில் பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பான வழக்குகளில், இவ்வாறு நூறு ஆண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகள் என்று தண்டனை விதிக்கப்படுவது வழமை என்ற பேரிலும் பொது மக்களை ஏமாற்றிய குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையாக அந்த நாட்டு சட்டப்படி 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது #பொதுமக்களை #ஏமாற்றிய #உணவக  #சிறை #பாங்கொக்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap