இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

போதை பொருள் துறந்து, புதுயுகம் படைத்திடுவோம் – யூனுஸ் பாத்திமா சுமைமா…

இவ் உலகில் இறைவனால் இயற்கையாக சில படைப்புக்கள், பொருட்கள் படைக்கப்பட்டன. அதில் மனிதனுக்கு பல வகையான நன்மைகள் குவிக்கப்பட்டிருந்தன. அதே சமயம் மனிதனால் சில செயற்கையான பொருட்கள் படைக்கப்பட்டன. அதில் நன்மைகள் சிறிதளவு காணப்பட்டாலும் மனித இன சீர்கேடுகளுக்கே பெருமளவு வழிவகுத்து வருகின்றன. உண்மைகள் சில வேளை கசத்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மூலை முடுக்குகளிலும் சரி, நாட்டிலும் சரிஇ வீட்டிலும் சரி,எங்கு பார்த்தாலும் சமுதாய சீர்கேடு. காரணம் கேட்டேன். ஒரே பதில் போதைவஸ்து பாவனை.

ஜீன் 26 போதைப்பொருள் பாவனைக்கு எதிராக குரல்கொடுத்தாலும், இன்று ஒவ்வொரு நாளும் போதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கல்யாணம் என்றாலும் குடிஇ கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை இல்லாமல்போனாலும் குடி, இன்பமாக இருக்கும் போதும் குடிஇ துன்பம் வந்தாலும் குடி.

போதைப்பொருள் வகைகளை நாம் நோக்கினால் மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின்இகஞ்சா, பான்மசாலா, போதைதரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும். எங்களால் சமுதாய சீர்கேடா? நாங்கள் பகற் காலங்களில் எமது குடும்பத்தினருக்காக ஓடி ஆடி உழைக்கின்றோம். இரவு தானே! எங்களின் உடல் சோர்வைப் போக்க போதைப்பொருளைப் பாவிக்கின்றோம். இதில் என்ன நடந்திடப்போகிறது? என சாதாரணமாக பதிலைச் சொல்லி தப்பித்துக் கொள்கிறோம்.

மானிடா? ஆறறிவு படைத்த நீயா இதைச் சொல்கிறாய்? எதிர்கால எமது அப்துல்கலாம்களை, எதிர்கால அன்னை தெரேசாக்களை, ஆப்ரஹாம்லிங்கன்களை, எதிர்கால படித்த சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளை, நாட்டை ஆளும் ஜனாதிபதியை என்று இந்த போதைவஸ்து பாவனை எதிர்கால தலைவர்களின் தலைவிதிகளையே இன்று மாற்றியிருக்கிறது. இது தான் உண்மை.

ஓவ்வொரு பிள்ளைக்கும் இன்று தமது பெற்றோரே முதல் கதாநாயகன் நாம் எதைச் செய்கிறோமோ? அதைத்தான் பிள்ளைகளும் கற்றுக் கொள்கிறார்கள். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் பெற்றோரின் வளர்ப்பினிலே’ ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பாடசாலை என்பது உண்மையில், பாடசாலை அல்ல. தாயின் கருவறை. நீ எதை விதைக்கிறாயோ? அதன் பலனை நீயே அனுபவிப்பாய். குழந்தை 10 மாதம் தாயின் வயிற்றிலிருந்து சூழலில் சுற்றியுள்ள பல விடயங்களை கற்றுக் கொள்கிறது. நாம் இன்று எதை கற்றுக்கொடுக்கின்றோம். யோசியுங்கள்! போதைவஸ்து பாவனையுடன்  ஒரு குழந்தை உருவாகிறது என்றால் அந்தக் குழந்தை ஏதோ ஒரு உளக்குறைபாடு, உடல் குறைபாட்டுடன் தான் பிறக்கிறது. இது தான் உளவியல்.

முக்கியமாக சிறார்களின் கல்வி நிலையானது பெருமளவு பாதிப்படைகிறது. இரவு முழுவதும் இந்த போதைவஸ்துவினால் பெற்றோர் சண்டை பிடிக்கின்றனர். இதனால் சிறுவர்களும் அமைதியற்று, நிம்மதியற்று வாடுகின்றனர். கல்வியைக் கூட மன அமைதியுடன் கற்க முடியாமல் இடை நடுவே விடக் கூடிய நிலை உண்டாகிறது. மேலும் பல நேரங்களில் சிறார்களையும் நாம் எமது தேவைக்காக அவர்களை கடைகளுக்கு அனுப்பி வாங்கச் செய்கிறோம். இதன் மூலம் அவர்களும் இதற்கு பழக்கப்படுகிறார்கள். அவர்களின் உடலில் பலம் இருக்கும் வரைதான் அவர்களுக்கு பாதிப்பில்லை. உடலில் பலம் குறையக் குறைய மதுவின் பாதிப்புக்கள் அதிகமாகி விடும். வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப்பழக்கம் பல நீங்கா வடுக்களை எமது மனதில் பதித்து சென்றுள்ளது.

கோபம்இ வெறுப்புஇ சண்டை, குடிப்பதற்காக கடன் வாங்குதல், பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். குடிப்பவர்களில் 10-20மூ மதுவுக்கு முழுமையாக அடிமையாகின்றனர். இரத்தத்தில் 20அப ஆல்கஹால் கலந்தாலே பார்வைத்திறன் குறையும் 30அப என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும், சிந்திப்பது, புரிந்து கொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும்.

மன அளவிலும் குடிக்கு அடிமையாகி விடுவதால் வாழ்க்கையிலும் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கை நடுக்கம்இ மனச்சோர்வுஇ சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம்இ பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை, தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, வயிற்றுப்புண், ஜீரண சக்தி குறைதல்இ புற்று நோய் அபாயம், கல்லீரல் வீக்கம், இதயத் துடிப்பில் மாற்றம்இவ்வாறான பல பிரச்சினைகளை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

போதைப்பொருட்களிலேயே அதன் விபரீதங்கள் பொறித்திருக்கும் நிலையில் கூட நாம் அதனை வாங்குகிறோம் என்றால் எம்மை விட முட்டாள் இவ்வுலகில் இல்லை என்று நான் கூறுவேன். மானிடா? ‘நீ மது அருந்தும் போது ஒன்றை யோசி உன் பிள்ளையின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக நீ உள்ளாய் என்று’ உலகில் 44-67மூ வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடி போதை காரணம் ஒரு புறமிருக்க, இவர்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இந்த நாட்டில் கடந்த மாதங்களில் மது விற்பனை மூலம் 15 நாட்களில் கிட்டதட்ட 200 கோடி ரூபா வரி வருமானம் நாட்டுக்கு என்கிறது ஒரு அறிக்கை. அதே 15 நாட்களில் எமது குடும்பங்களுக்கு 200 கோடி ரூபா இழப்பீடு இதற்கு யார் காரணம்? மேலும் இந்த நாட்டில் போஷாக்கின்மையால் எத்தனையோ மானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மது தேவைப்பட்டவனுக்கு மதுவை எத்தடையும் இன்றி வழங்கும் அரசாங்கத்துக்கு மானவர்களின் போஷாக்குத் தேவையை ஏன் பூர்த்தி செய்துக் கொடுக்க முடியவில்லை? இலங்கையில் தனி நபர் மதுபாவனை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது 5 மடங்கு அதிகம். ஐரோப்பியர்கள் விண்வெளியில் ஆய்வு செய்யும் போது நாம் மது பானத்தில் என்ன? என்ன? வகைகள் உள்ளன என ஆய்வு செய்கின்றோம். வேதனை தரக் கூடிய விடயமல்லவா இது?

போதைப் பொருள் என்பது உடல் நலத்திற்கு கேடு தரும் பொருளாகக் காணப்படுகிறது. இதை அறிந்தும் அரசாங்கத்தின் உயர் அதிகாரியாக இருக்கட்டும், படித்தவர்களாக இருக்கட்டும் ஏன் இன்னும் போதைவஸ்து விற்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆக, மக்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம் என்பது போல அரசும் மக்களும் போதைப்பொருளுக்கு எதிராக கைகொடுத்து குடும்ப சீரழிவை குறைத்துபுதுயுகம்படைத்திடமுன்வருவோமாக.

யூனுஸ் பாத்திமா சுமைமா
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.
இரண்டாம் வருடம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap