கொரோனா வைரஸ் தங்கள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தார். அதன்தொடர்ச்சியாக அந்த நாட்டில் 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்பதனால் ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
இந்நிலையில் இன்று நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு பேரும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்துவிட்டு நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளான இருவரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #இயல்புநிலை #நியூசிலாந்து #கொரோனா #ஊரடங்கு
Spread the love
Add Comment