இலங்கை பிரதான செய்திகள்

வெளிநாட்டு வைப்புக் கணக்கு குறித்த உத்தரவை வெளியிடுவதற்கு அனுமதி…

இலங்கைக்கு வெளியில்  மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி பண பரிமாற்றலை வரையறுத்தல் மற்றும் வெளிநாட்டு வைப்புக் கணக்கு தொடர்பில் உத்தரவை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் (Limitation of remittance of foreign exchange from the country and obtain approval to issue orders on the foreign exchange deposit account.) அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைவாக இதற்கான வர்த்தமானி அறிவிப்பின் காலம் 2020 ஜுலை மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில்,

(இலங்கைக்கு  அப்பால் மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி பண பரிமாற்றலை வரையறுத்தல் மற்றும் வெளிநாட்டு வைப்புக் கணக்கு தொடர்பில் உத்தரவை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குதல்)

இலங்கைக்கு  அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறல்களை 03 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு 2020 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கமைவாக வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 2020 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானியின் மூலம் தொடர்புபட்ட உத்தரவு வெளியிடப்பட்டது.

இதேபோன்று விசேட வைப்பீடு கணக்கு மூலம் நாட்டில் வெளிநாட்டு செலவாணி பணத்தை ஊக்குவிப்பதற்காக தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கென 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 2017ஆம் ஆண்டு இலக்கம் 12 இன் கீழான வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் 29 ஆம் சரத்தின் கீழ் மற்றும் அந்த சட்டத்தின் 29 ஆவது சரத்தின் கீழ் தொடர்புபட்ட விதிமுறைகளுக்கு அமைவாக 2020.04.02 மற்றும் 2020.04.08 வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த உத்தரவுகளுக்கு அமைவாக தொடர்ந்தும் கீழ்கண்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுப்பதற்கு அமைவாக உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை 2020 ஜுலை மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடித்தல்.

விசேட வைப்பீட்டு கணக்கின் மூலம் நாட்டிற்குள் அந்நிய செலாவணி பணத்தை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை முன்னெடுக்கும் பொழுது தற்பொழுது நிலவும் அந்நிய செலாவணி சட்டம், பணத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பணத்தை பயன்படுத்துவதை தடுப்பதுடன் தொடர்புபட்ட சட்டத்திலுள்ள ஒழுங்குவதிகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு இலக்கம் 12 கீழான வெளிநாட்டு செலவாணி சட்டத்தின் 29ஆவது சரத்தின் கீழ் உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட 2020.04.08 திகதி வர்த்தமானி அறிவிப்பில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிடுதல்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap