இலங்கை பிரதான செய்திகள்

ஹேமாஸின் CEO ஆக கஸ்தூரி செல்லராஜா வில்சன் தெரிவானார்…

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி குழுமத்தின்  தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய  ஸ்டீவன் எண்டர்பிக்கு அடுத்தபடியாக,  2020 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் கஸ்தூரி செல்லராஜா வில்சனை நியமிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நீண்ட கால தலைமைத்துவ மாற்றத் திட்டத்திற்கு ஏற்ப 2020 ஜூலை 1 திகதி முதல் கஸ்தூரி துணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்படுவார்.

“எங்கள் நிறுவனத்தின் அகத் திறமைகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கும் நமது தலைமைத்துவ மாற்றத் திட்டத்திற்கு ஏற்ப முழுமையான தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து கஸ்தூரியை குழு தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க பணிப்பாளர் சபை முடிவு செய்தது. 2002 ஆம் ஆண்டு முதல் எங்களுடன் இருந்த கஸ்தூரி ஹேமாஸுக்கு புதியவரல்ல மேலும் எமது நீண்டகால சக- ஊழியர் குழுமதத்தின் மிக உயர்ந்த நிர்வாக பதவியை வகிக்க உயர்ந்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் தலைவரான ஹுசைன் ஏசுஃபலி அறிவித்துள்ளார்.

இந்த மாற்றம் குறித்து ஏசுஃபலி மேலும் கருத்து கூறுகையில் “கடந்த ஆறு ஆண்டுகளில் ஸ்டீவனின் தலைமை ஹேமாஸை மிகவும் நெறிப்படுத்தப்பட்ட நோக்கமான மற்றும் பயனுள்ள அமைப்பாக மாற்ற உதவியது இது எங்கள் எதிர்காலத்தை நல்ல நிலையில் அமைக்க உதவும். பல ஆண்டுகளாக ஹேமாஸுக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காக ஸ்டீவனுக்கு நன்றி தெரிவிப்பதில் பணிப்பாளர் சபை என்னுடன் இணைகிறது. மேலும் ஹோட்டல்துறையில் எங்கள் வணிகங்களின் பணிப்பாளர் சபைகளின் உறுப்பினராக ஸ்டீவன் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

“எதிர்வரும் காலம் எமக்கு இலங்கையிலும் ஆசிய பிராந்தியத்திலும் பல வாய்ப்புகளை முன்வைக்கிறது இது தற்போதுள்ள எங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல் நமது முக்கிய வணிகங்களான நுகர்வோர் சுகாதாரம் மற்றும் இயக்கம் ஆகிய துறைகளின் ´புதிய வளர்ச்சி´ பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயனாகும். ஹேமாஸின் வருவாய் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது மேலும் எதிர்வரும் ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்” ஏசுஃபலி கூறினார்.

ஹேமாஸில் இரண்டு தசாப்தங்களான நிறுவன வாழ்க்கையில் மென்மேலும் அதிகமாக பொறுப்புகளை ஏற்று தலைமை நடைமுறை அதிகாரி நிலைக்கு உயர்ந்த கஸ்தூரி 2011 ஆம் ஆண்டில் குழுவின் விமான போக்குவரத்து பயணம் மற்றும் இயக்கம் ஆகிய வணிகங்களின் தலைமை நிலையை அடைந்தார். 2016 ஆம் ஆண்டில் ஹேமாஸ் பார்மசியூட்டிகல்ஸ் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற கஸ்தூரி வளர்ந்து வரும் நோயாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாக பணியாற்றிய அதே நேரம் ஒரு சவாலான ஒழுங்குமுறை சூழலில் நிலையான வளர்ச்சியையும் வழங்கினார்.

கஸ்தூரி பிரித்தானியாவின்  Chartered Institute of Management Accountants (CIMA-UK) வின் மூத்த உறுப்பினர் (Fellow member) ஆவார். அவர் தனது தொழில் வாழ்க்கையில் பல தலைமைத்துவ பாடதிட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மூத்த நிர்வாக தலைமைத்துவ நிகழ்ச்சி முக்கியமானது. பல ஆண்டுகளாக அவர் தொழில் மன்றங்கள் மற்றும் குழுக்களுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். கேபிடல் அலயன்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பணியாற்றும் இவர் இலங்கை மருந்தாக்கள் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் ஆவார். கஸ்தூரி 2019 ஆம் ஆண்டில் விசேட தனிச் சிறப்புவாய்ந்த இலங்கைப் பெண்களில் ஒருவராக இலங்கை நாடாளுமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

நுகர்வோர் சுகாதாரம் இயக்கம் மற்றும் ஹோட்டல் துறைகளில் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான நுகர்வோரின் வாழ்க்கையை ஹேமாஸ் தொடுகிறது. இலங்கையை தலைமையிடமாகக் கொண்ட ஹேமாஸ் பங்களாதேஷ் மேற்கு வங்கம் மற்றும் மியான்மரிலும் செயல்பட்டு வருகிறது. கஸ்தூரி வில்சன் ஹேமாஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ஸ்டீவன் எண்டர்பிக்கு அடுத்தபடியாக பொறுப்பேற்கிறார்.

கொழும்பு 25 ஜூன் 2020 – ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி குழுமம் தலைமை நிர்வாக அதிகாரியா ஸ்டீவன் எண்டர்பிக்கு அடுத்தபடியாக 2020 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் கஸ்தூரி செல்லராஜா வில்சனை நியமிப்பதாக அறிவித்துள்ளது. நீண்ட கால தலைமைத்துவ மாற்றத் திட்டத்திற்கு ஏற்ப 2020 ஜூலை 1 திகதி முதல் கஸ்தூரி துணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்படுவார்.

´எங்கள் நிறுவனத்தின் அகத் திறமைகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கும் நமது தலைமைத்துவ மாற்றத் திட்டத்திற்கு ஏற்ப முழுமையான தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து கஸ்தூரியை குழு தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க பணிப்பாளர் சபை முடிவு செய்தது. 2002 ஆம் ஆண்டு முதல் எங்களுடன் இருந்த கஸ்தூரி ஹேமாஸுக்கு புதியவரல்ல மேலும் எமது நீண்டகால சக- ஊழியர் குழுமதத்தின் மிக உயர்ந்த நிர்வாக பதவியை வகிக்க உயர்ந்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.´ என ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் தலைவரான ஹுசைன் ஏசுஃபலி அறிவித்தார்.

இந்த மாற்றம் குறித்து ஏசுஃபலி மேலும் கருத்து கூறுகையில் ´கடந்த ஆறு ஆண்டுகளில் ஸ்டீவனின் தலைமை ஹேமாஸை மிகவும் நெறிப்படுத்தப்பட்ட நோக்கமான மற்றும் பயனுள்ள அமைப்பாக மாற்ற உதவியது இது எங்கள் எதிர்காலத்தை நல்ல நிலையில் அமைக்க உதவும். பல ஆண்டுகளாக ஹேமாஸுக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காக ஸ்டீவனுக்கு நன்றி தெரிவிப்பதில் பணிப்பாளர் சபை என்னுடன் இணைகிறது. மேலும் ஹோட்டல்துறையில் எங்கள் வணிகங்களின் பணிப்பாளர் சபைகளின் உறுப்பினராக ஸ்டீவன் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.´

´எதிர்வரும் காலம் எமக்கு இலங்கையிலும் ஆசிய பிராந்தியத்திலும் பல வாய்ப்புகளை முன்வைக்கிறது இது தற்போதுள்ள எங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல் நமது முக்கிய வணிகங்களான நுகர்வோர் சுகாதாரம் மற்றும் இயக்கம் ஆகிய துறைகளின் ´புதிய வளர்ச்சி´ பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயனாகும். ஹேமாஸின் வருவாய் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது மேலும் எதிர்வரும் ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்´ ஏசுஃபலி கூறினார்.

ஹேமாஸில் இரண்டு தசாப்தங்களான நிறுவன வாழ்க்கையில் மென்மேலும் அதிகமாக பொறுப்புகளை ஏற்று தலைமை நடைமுறை அதிகாரி நிலைக்கு உயர்ந்த கஸ்தூரி 2011 ஆம் ஆண்டில் குழுவின் விமான போக்குவரத்து பயணம் மற்றும் இயக்கம் ஆகிய வணிகங்களின் தலைமை நிலையை அடைந்தார். 2016 ஆம் ஆண்டில் ஹேமாஸ் பார்மசியூட்டிகல்ஸ் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற கஸ்தூரி வளர்ந்து வரும் நோயாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாக பணியாற்றிய அதே நேரம் ஒரு சவாலான ஒழுங்குமுறை சூழலில் நிலையான வளர்ச்சியையும் வழங்கினார்.

கஸ்தூரி இங்கிலாந்தின் Chartered Institute of Management Accountants (CIMA-UK) வின் மூத்த உறுப்பினர் (Fellow member) ஆவார். அவர் தனது தொழில் வாழ்க்கையில் பல தலைமைத்துவ பாடதிட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மூத்த நிர்வாக தலைமைத்துவ நிகழ்ச்சி முக்கியமானது. பல ஆண்டுகளாக அவர் தொழில் மன்றங்கள் மற்றும் குழுக்களுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். கேபிடல் அலயன்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பணியாற்றும் இவர் இலங்கை மருந்தாக்கள் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் ஆவார். கஸ்தூரி 2019 ஆம் ஆண்டில் விசேட தனிச் சிறப்புவாய்ந்த இலங்கைப் பெண்களில் ஒருவராக இலங்கை நாடாளுமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

நுகர்வோர் சுகாதாரம் இயக்கம் மற்றும் ஹோட்டல் துறைகளில் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான நுகர்வோரின் வாழ்க்கையை ஹேமாஸ் தொடுகிறது. இலங்கையை தலைமையிடமாகக் கொண்ட ஹேமாஸ் பங்களாதேஷ் மேற்கு வங்கம் மற்றும் மியான்மரிலும் செயல்பட்டு வருகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.