உலகம் பிரதான செய்திகள்

கொரோனாவினால் உலகளவில் கல்வித் துறையில் பெரும் பின்னடைவு ஏற்படும்

கொரோனா வைரஸ் காரணமாக, உலகளவில் மாணவர்களின் கல்வித் துறையில் பெரும் பின்னடைவு ஏற்படும் என ஐ.நா சபையின் கல்வி அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதனால் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவிகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரிக்கும்.

பாடசாலைகள்; மூடி இருப்பதால், கல்வி ஆண்டு, ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், பாடசாலைகள உரிமம், தேர்வு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளைத் திறந்தாலும், ஆசிரியர்கள், தொற்று அபாயம் குறித்து அச்சப்படுவாhகள்;. மிகக்குறைவான பாடசாலைகளில் மட்டுமே சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற முடியும். இதனால் மாணவர்களின் படிப்புக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும். ஏன்ற போதிலும்எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது.

இணைய வகுப்பு மூலம் கற்பிக்கும் பணி நடைn பற்று வருகின்ற போதிலும் பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அந்த வசதி கிடைக்காது. இதனால், இணையம் மூலம் வகுப்பு நடத்துவது, சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்துவிடும். ஆகவே, அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய சிறப்பான கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #கல்வித்துறை  #பின்னடைவு  #யுனெஸ்கோ

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap