இலங்கை பிரதான செய்திகள்

கல்முனை  நகர மண்டபத்தை பொதுமக்கள் பாவனைக்கு விட தீர்மானம்

கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறு கோரி  கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

வழமையான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து  மாநகர முதல்வரினால் கல்முனை மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான மாதாந்த கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து கல்முனை நகர மண்டபத்தை மக்கள் பொது பாவனைக்கு விடுக்க கோரி கடந்த கால  சபை அமர்வுகளில் கருத்துக்களை முன்வைத்து வந்த  மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர் இன்றைய  மாநகர சபை மாதாந்த அமர்வில் மீளவும்  கோரிக்கையையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

இதன் போது  மேலும் தெரிவித்ததாவது

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் பொது மக்களுக்காக நிகழ்வுகளை மற்றும் கூட்டங்களை கலாச்சார நிகழ்வுகளை நடாத்த பொதுமக்கள் பல்வேறு அசெளகரியமான நிலையில் உள்ளனர்.

கல்முனை மாநகரசபை கட்டிடமானது புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள நிலையில் கல்முனை மாநகர மாதாந்த சபை அமர்வுநகர மண்டபத்தில் மாற்றப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இதனை பொதுமக்கள் பாவனைக்கு இந்த நகர  மண்டபத்தை திறந்து விடுவது பற்றிய சிக்கல்கள் காணப்பட்டது .தற்போது கல்முனை மாநகர சபை புதிய கட்டிடத்திற்கான நிர்மாணத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் சரியான தீர்மானம் இல்லாமல் உள்ள நிலையில்  ஒரு மாதத்தில் ஒரு தடவை கூட்டப்படுகின்ற எமது  மாதாந்த அமர்வுகளை  இவ் நகர மண்டபத்தை நடாத்துவதில் இருக்கின்ற சாதக பாதக விடயங்களை ஆராய வேண்டியுள்ளது .
ஏனென்றால் இவ் நகர மண்டபம் ஆரம்பத்தில் நிர்மாணிக்கபட்ட பின் இதில் பல கலாச்சார நிகழ்வுகள்  ஏனைய பொது நிகழ்வுகள் எல்லாம் இங்கு  இடம் பெற்று வந்தது. அதன் பின்னர் மாநகர சபையினால் தனியார் நிறுவனமொன்றுக்கு வாடகைக்கு விடப்பட்ட பின்னர் பொது மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது அதன் பின்னர் குறித்த தனியார் நிறுவனத்திக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட இவ் கட்டிடத்தின் ஒப்பந்தம் மாநகர சபையினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் கல்முனை மாநகர கட்டிடடமானது புதிதாக கட்டிடம் நிர்மாணிக்கப்பட உள்ள நிலையில் சபை அமர்வுகள் இங்கு இந்த நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மாநகர கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருந்தால்சபை அமர்வுகள் இங்கு இடம்பெற எந்த ஆட்சேபனையும் இருந்திருக்காதுஆனால் கல்முனை மாநகர கட்டிடம் உடைக்கப் படாத நிலையில் மாதத்தில் ஒரு தடவை இந்த நகர மண்டபத்தில் சபை அமர்வுகள் இடம் பெறும் நிலையில் பொது மக்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதையும் இச் சபையில் கவனத்திற் கொள்ள விரும்புகிறேன் .
இன்றுதனியார் மண்டபங்களில் நிகழ்வுகள் இடம்பெற அதிக வாடகை காணப்படுகின்றதுஎமது பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி எமது சபை ஒன்றுகூடலை முன்னர் இடம்பெற்ற இடத்தில் நடாத்துவதன் மூலம் பொது மக்களின் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் மக்கள் பாவனைக்கு நகர மண்டபத்தினை திறந்து வைக்க வேண்டுமென முக்கிய கோரிக்கையை முன் வைகிறேன் என்றார் .மேலும் இதன் போது இக் கோரிக்கைக்கு ஆதரவாக மற்றுமொரு  உறுப்பினர்  ஏ.ஆர்.எம்.அஸீம்  ஆமொதித்து   பொது மக்கள் பாவனைக்கு விடும் படி சபையில் உரையாற்றினார் .இதற்கமைய  மக்களின் பாவனைக்கு குறித்த  மண்டபத்தை விடுவிக்கும்  வேண்டுகோளை சபையின் ஏக மனதான தீர்மானமாக  ஏற்றுக்கொண்டு மீண்டும் பழைய இடத்தில் அடுத்த மாதாந்த அமர்வு இடம்பெறுமென முதல்வர்   சபையில் அறிவித்தார். #கல்முனை  #நகரமண்டபம்   #பாவனை #மாநகரசபை  #தீர்மானம்

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.