இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு இருவரையும் முன்னிலையாகுமாறு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையான உபுல்தரங்க, சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ள அதேவேளை ,இலங்கை அணியின் தெரிவிக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா நேற்றைய தினம் முன்னிலையாகி சுமார் ஐந்தரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #மகேல #சங்கக்கார #வாக்குமூலம் #விளையாட்டுத்துறை #உலகக்கிண்ண #ஆட்டநிர்ணயசதி
Add Comment