Home உலகம் அல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது…

அல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது…

by admin

அல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் அரசு அந்நாட்டிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின்போது பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அல்ஜீரிய போராளிகள் பலர் பிரெஞ்சுப்படைகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

1849 இல் பிரெஞ்சு படைகளால் பிடித்துக் கொல்லப்பட்டபின்னர் தலை துண்டிக்கப்பட்ட முக்கிய அல்ஜீரியப் போராளி Sheikh Bouzian என்பவரது எச்சங்கள் உட்பட 24 பேரது உடற்பகுதிகள் விசேட விமானம் ஒன்றில் அல்ஜீரியாவுக்கு எடுத்துவரப்படுகின்றன என்ற தகவலை அந்நாட்டு அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அல்ஜீரிய போராளிகளது இந்த எச்சங்கள் இதுவரை பிரான்ஸின் Musee de l’Homme தேசிய அருங்காட்சியகத்தில் பேணிப்பாது காக்கப்பட்டு வந்தன. அவற்றை அல்ஜீரியாவிடம் மீள ஒப்படைக்குமாறு மனித உரிமையாளர்களும் கல்வியியலாள ர்களும் நீண்ட காலமாகக் கோரிவந்தனர்.

132 ஆண்டுகள் பிரான்ஸின் காலனியாக இருந்துவந்த அல்ஜீரியா இறுதியாக எட்டு ஆண்டுகள் நீடித்த கடும் போரின் முடிவில் 1962 இல் சுதந்திரம் பெற்றது. இந்தப்போரில் 1.5 மில்லியன் அல்ஜீரிய மக்கள் கொல்லப்பட்டனர்.

மக்ரோன் 2017 இல் தனது அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்களின்போது, அல்ஜீரியா மீதான பிரெஞ்சு நாட்டின் காலனி ஆதிக்கத்தை ‘மனித குலத்துக்கு எதிரான குற்றம்’ (crime against humanity) என்று கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார்.அதிபராக பதவி ஏற்றதும் அதே ஆண்டில் அல்ஜீரியாவுக்கு விஜயம் செய்த அவர், ஒரு ‘நண்பனாக’ வந்திருப்பதாக அங்கு வைத்து அறிவித்திருந்தார்.

பிரெஞ்சு நாட்டின் அரசுத் தலைவர்களில் அல்ஜீரிய யுத்த காலத்துக்குப்பின்னர் பிறந்த முதல் அதிபர் மக்ரோன் ஆவார்.

நன்றி – Kumarathasan Karthigesu முகநூல்)

02-06-2020
வியாழக்கிழமை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More