வெலிகட சிறைச்சாலைக் ;கைதி கொலைக் குற்றவாளியான காவல்துறைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறைப் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ தன்னிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த தான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தன்னை நியோமல் ரங்கஜீவ பலவந்தமாக நீதிமன்ற காவல்துறை முகாமிற்கு இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #நியோமல் #பலவந்தமாக #தாக்குதல் #ஊடகவியலாளர் #வெலிகட
Add Comment