கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று (27) முன்னிலைப்;படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
2015ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது #பிள்ளையான் #விளக்கமறியல் #ஜோசப்பரராஜசிங்கம்
Spread the love
Add Comment